Posts

Showing posts from September, 2020

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..

Image
 விவசாய விரோதச் சட்டங்களான “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)ச் சட்டம்-2020”; “விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020”; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் சார்பில் தாக்கல் அம்மனுவினை கழக மூத்த வழக்கறிஞர்  திரு.#பி_வில்சன்_MP அவர்கள்  வடிவம் செய்ய இவ்வழக்கைத்உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் # துரை_குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.. M. K. Stalin #K_N_NEHRU A Raja @Kumanan_Durai https://www.facebook.com/1365690358/posts/10224217707654805/?extid=0&d=n

திமுக பொதுக்குழுக்கூட்டம்: “காணொலியில் கூடுவோம்; கழகத்தின் கொள்கை கீதம் பாடுவோம்!”

Image
  தி.மு.கழக பொதுக்கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, திமு.க. தொண்டர்களுக்கு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், அவர் குறிப்பிட்டிருப்பதின் விவரம் பின்வருமாறு:- “இது ‘முப்பெரும் விழா’ மாதம்! ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார்- தமிழரின் தன்மானம் காத்த பேரறிஞர் அண்ணா; இருவரும் பிறந்த மாதம். பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு - தலைவர் கலைஞர் அவர்களால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட மாதம். இந்த மூன்று விழாக்களையும் ஒன்றிணைத்து ‘முப்பெரும் விழா’வாகக் கொண்டாடும் பாங்கை நமக்கு வழங்கியவர், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழாக்களும் மாநாடுகளும், கூடிக் கலைவதற்கானவைகளல்ல. அவை, "கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள்". அங்கே கொள்கை முழக்கங்கள் எதிரொலிக்கும் . அவை, தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்தையும், தனிப்பெரும் முன்னேற்றத்தையும், நலனையும், ...