திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி? #Vijayarajesh88


#stalin #DMK

திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?


அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்?


 கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்?


 மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?


 பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்?


 ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?


மின் கட்டணத்தில் சலுகையும், கால நீட்டிப்பும் கொடுங்கள் என்று சொன்னது யார்?


நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள், சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்?


*கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்?*


பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்?


இவ்வளவையும் சொன்னது நான் தான். ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி

Comments

Popular posts from this blog

விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..