அநீதி வீழும்! அறம் வெல்லும் !
அநீதி வீழும்! அறம் வெல்லும் !
திமுகவின் தொடர் போராட்டத்தினால் தொடர் அழுத்தத்தினாலும் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இரட்டைக் கொலையில் தொடக்கத்திலிருந்தே குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப் பட்டிருக்கிறது.
உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் என்று தீர்ப்பு எழுதியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
லாக் அப் மரணமே இல்லை’ என்றார் உள்ளூர் அமைச்சர். மிரட்டிய காவல்துறை என ’மேலிடம்’ தொடங்கி அனைவருமே குற்றத்தை மறைக்க முயன்றனர்.
கடைசியில் "அநீதி வீழ்ந்தது, அறம் வென்றது". இன்னும் முழுமையாக குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கப்பெறவில்லை. கடுமையான தண்டனை கிடைக்க வரைக்கும் அந்த குடும்பங்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்.
ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் சரவணன், மருத்துவச்சான்று கொடுத்த மருத்துவர் வெண்ணிலா, காயத்தோடு சிறையில் அனுமதித்த கோவில்பட்டி கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும். சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பை உண்டாக்கும் காவல்துறை உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இவ்வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
👍👍👍👍👍
ReplyDelete