தலைவர் கலைஞர் அவர்களின் நினைவலைகள்:
1996ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த மூப்பனார் தொடங்கிய தமாகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வரானார். எதிர்கட்சித் தலைவராக தமாகாவை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் திமுக, தமாகா உறவு சுமுகமாக போனது. கொஞ்ச நாளில் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது சிமெண்ட் விலை உச்சத்தில் இருந்தது. தமாகா அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவனில் தமாகவினர் மலிவுவிலை சிமெண்ட் விற்பனை செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்த நிலையில் சட்டசபையில் திமுக தமாக இடையே கடும் வாக்குவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. சட்டசபையில் ஒருநாள் சோ.பாலகிருஷ்ணன் எழுந்து "என்னுடைய வீட்டு தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது. உளவுத்துறையினர் என்னை கண்காணிக்கின்றனர். அது எனக்கே தெரிகிறது" என்று பேசினார்.
கூட்டணி கட்சியின் சட்டசபை தலைவர் இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில் சபையே பதற்றமடைந்தது. பதில் சொல்ல நிதானமாக எழுந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். "தனது வீட்டு தொலைபேசி ஒட்டுகேட்கபடுவதாகவும், உளவுத்துறையினர் அவரை கண்காணிப்பதாகவும், அது தனக்கே தெரிவதாகவும், எதிர்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்". அவருக்கே தெரியும் அளவு ஒரு போலிஸ்காரர் ஒருவர் உளவு பார்க்கிறார் என்றால், அவர் உளவு பார்க்கும் வேலைக்கு லாயக்கு இல்லாதவர், உடனடியாக அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
இதனை கேட்டதும் எதிர்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் உட்பட அனைத்து எம் எல் ஏக்களும் சத்தமாக சிரித்தனர்.
தலைவர் கலைஞர் அவர்களின் சட்டசபை உரையாடல்கள் அனைத்தும் லாவகமாக தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.
#dmk_rajeshkumar
Comments
Post a Comment