தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில்.....


மக்களுக்கு தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்த தீர்க்கதரிசனம் பெற்ற தலைவர்

"கலைஞர் நினைவை போற்றுவோம்"

கலைஞருக்கு தெரியும்.. விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என்று. அதனால் தான் வள்ளுவனை வானுயர நிறுவினார்.

கலைஞருக்கு தெரியும்... வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது என்று.. அதனால்தான், கம்ப ராமாயணத்தை முன்னிலை படுத்தினார். 

கலைஞருக்கு தெரியும்.. சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று... அதனால் தான், கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.

கலைஞருக்கு தெரியும்.. மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று.. அதனால் தான், சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார். 

இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார். 

ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். 

அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை. உள்ளே மெல்லவும் முடிய வில்லை. 

அவர்களுக்கு தெரியும்.. கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று. கலைஞருக்கும் தெரியும்.. அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று. 

புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள். 

ஆனால்,  புரியாத பலர் ஊழல், ஈழம் என்று கட்டுக்கதைகளில் மூழ்கினார்கள். 



எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் கலைஞர்.  கலைஞர் என்ற பட்டத்திற்கு 100 சதம் பொறுத்தமானவர்


Comments

Popular posts from this blog

விஜய நான் விமர்சிக்க ஒரே காரணம் ஒன்னும் இல்லாத அந்த 2ஜி பற்றிய வசனம் மட்டுமே

விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் துரை குமணன் அவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளார்..